ஆத்திரமடைந்த த.வெ.கவினர்..!  17 ஆம் தேதியன்று சென்னை வியாசர்பாடி மார்க்கெட் பகுதியில், சென்னை மாநகராட்சி சார்பில் மக்களுக்கு நோட்டீஸ்  விநோயோகம் செய்யப்பட்டது. இதனை கவனித்த த.வெ.கவினர் அந்த நோட்டீஸை வாங்கி பார்த்தபோது, "எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை என்றால் நோட்டாவின் பட்டனை அழுத்துங்கள் என 16 வது வரிசை எண்ணை அதில் காண்பிக்கப்பட்டிருந்தது.  பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில்  போட்டியிடும் விஜய்க்கு, தேர்தல் ஆணையம் மின்னணு இயந்திரத்தில் வரிசை எண் 16 ஒதுக்கியுள்ள நிலையில், நோட்டாவை 16 வது எண்ணாக சித்தரித்து நோட்டீஸ் வழங்குவதாக த.வெ.கவினர்  ஆத்திரமடைந்தனர்.  உடனே அந்த நபரை பிடித்த த.வெ.கவினர், பெரம்பூர் தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவகத்திற்கு அழைத்து சென்றனர்.  மாநகராட்சி அதிகாரிக்கு போன் செய்த த.வெ.கவினர், 16 வது வரிசை எண் நோட்டாவிற்கு என்பது போல  நோட்டீஸ் அடித்து விநியோகம் செய்கிறீர்கள், வேறு எண்ணை குறிப்பிட்டிருக்கலாமே? எனக் கேட்டனர். அதற்கு அது பழைய நோட்டீஸ் என்றும், விநியோகம் செய்தவரை விட்டு விடுங்கள் என மாநகராட்சி அதிகாரி தெரிவித்தார்.  இது குறித்து பேசிய த.வெ.க மாவட்ட இணை செயலாளர் ஜெகன், விஜய்யின் வரிசை எண் 16 என இருக்கும் போது, அந்த எண் நோட்டாவுக்கானது என்பதை போல மக்களை குழப்பும் விதத்தில் மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது, இனி இந்த நோட்டீஸை மக்களிடம் விநியோகம் செய்யமாட்டோம் என தேர்தல் நடத்தும் அதிகாரி உறுதி அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.  நோட்டீசை வழங்கிய நபரிடம் இது குறித்து கேட்டபோது, தான் ஒரு பள்ளியில் ஆபிஸ் அசிஸ்டன்டாக வேலை பார்த்து வருவதாகவும், ரிப்பன் மாளிகையில் உள்ள ஏ.இ.ஓ அதிகாரி தான் இதை வழங்க சொன்னதாகவும் அந்த நபர் தெரிவித்தார். மாநகராட்சியில் இருந்து கொடுத்தாலும் இது  தவறு, பழைய நோட்டீஸ் என தேர்தல் நடத்தும் அதிகாரி தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.  ஏற்கனவே, விஜய் போட்டியிடும் தொகுதியில் விஜய் என்ற பெயரில் இரண்டு வேட்பாளரும் , ஜோசப் என்ற பெயரில் இரண்டு வேட்ப்பாளரும்  சுயேட்சை வேட்பாளர்களாக களம் காண்கின்றனர். இந்த நிலையில், மக்களிடம் வரிசை எண்னை குழப்பும் வகையில் நோட்டீஸ் விநியோகம்  என விஜய் கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடியை வைப்பதாக த.வெ.கவினர் தங்களது ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர்.  அதே நேரத்தில் விஜய் பெரம்பூர் தொகுதிக்குட்பட்ட கொடுங்கையூரில்  தங்கள் கட்சி பெண் நிர்வாகிகளுடன் விசில் மாதிரி கோலம் வரைந்து கொண்டிருந்தார். வீடியோவை பார்க்க லிங்கை க்ளிக் செய்யவும்..!  ]]>

Bills & Payments · SPONSORED

Pay Any Bill Instantly

Electricity, water, gas and more — one app, zero hassle.

Visit AllBills.in