"திமுக வேட்பாளர் தான் காரணம்" - அதிமுக வேட்பாளர் தகவல் அறிந்து வந்த அதிமுக வேட்பாளர் பி.வி.ரமணா, ஹரிஷ் பாலாஜியிடம் இந்த சம்பவம் குறித்து விவரங்களை கேட்டதோடு,சிசிடிவி யில் பதிவான காட்சிகளையும் பார்வையிட்டார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அதிமுக வேட்பாளர் பி.வி.ரமணா, திமுக வேட்பாளர் வி. ஜி.ராஜேந்திரன் தோல்வி பயம் காரணமாக அவரது தூண்டுதலின் பேரில் கல் வீசப்பட்டதாக குற்றம் சாட்டினார். அதிமுக நிர்வாகி கைது..! இந்த சம்பவம் குறித்து திருவள்ளூர் நகர போலீஸ் ஆய்வாளர் தாமோதரன் வழக்குப் பதிவு செய்து சிசிடிவியில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் கல் வீசி தாக்கியது கடம்பத்தூர் ஒன்றியம், காரணி கிராமத்தை சேர்ந்த 25 வயது விக்னேஷ் என்பதும் அவர் அதிமுக பிரமுகர் என்பதும் தெரியவந்தது . இதனையடுத்து அந்த இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டபோது, திருவள்ளூரை சேர்ந்த சக்திவேல் என்பவர் நடத்தி வரும் ஷைன் ஸ்போர்ட்ஸ் அகடாமியில், தான் தடகள பயிற்சியாளராக இருப்பதாகவும், அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளராக இருக்கும் ஹரிஷ் பாலாஜி கட்சியில் தன்னை வளரவிடாமல் தடுப்பதாகவும், அனைத்து நிகழ்ச்சிகளிலும் தன்னை மட்டம் தட்டி வந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனால் விரக்தியில் இருந்த அதிமுக நிர்வாகி விக்னேஷ், மதுபோதையில் ஹரிஷ் பாலாஜியின் வீட்டின் மீது கல் வீசி தாக்குதல் நடத்தியதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, போலீசார் விக்னேஷை திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதெல்லாம் நம்பியார் டெக்னிக் - திமுக வேட்பாளர் கலாய்..! திருவள்ளூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் வி. ஜி.ராஜேந்திரன், கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அதிமுக பிரமுகர் வீட்டில் கல் வீசி தாக்கியதாக என் மீது பொய்யான குற்றச்சாட்டை சுமத்தினார். ஆனால் அதிமுக பிரமுகரே கல் வீசியதாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருப்பதாக நாளிதழ்கள் மற்றும் ஊடகங்களில் வந்த செய்திகளை காண்பித்து விவரித்தார். பழைய வில்லன் நடிகர் நம்பியார் பாணியில் செயல்படாமல் புதிய பாணியில் செயல்படுமாறும் கிண்டல் அடித்தார்.அவதூறு பரப்பியதால் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்ததோடு, மான நஷ்ட ஈடாக 10 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் வி. ஜி.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். கல் வீசியது யார்? அவரே பாம் வைப்பாராம், அவரே பாம எடுப்பாராம் என முதல்வன் பட வசனத்தை பேசி பழைய டெக்னிக் என வி. ஜி.ராஜேந்திரன் கலாய்த்து பேசினார். வீடியோவை காண லிங்கை க்ளிக் செய்யவும்..! ]]>
அரசியல்
சாரயேவோ
சாரயேவோ பொசுனியா எர்செகோவினாவின் தலைநகரமும் நாட்டின் மிகப்பெரும் நகரமும் ஆகும்.இந்த மாநகரம் 305,242 மக்கள் வாழும் நான்கு நகராட்சிகளையும் 423,645மக்கள்தொகை கொண்ட சாரயேவோ கன்டன் எனப்படும் பல்லின நகரையும் உள்ளடக்கியுள்ளது.(as of ஆகத்து 2009). இது சாரயேவோ கன்டனின் மையமாகவும் பொசுனியா
5d ago· 16 min read


