சில மீட்டர் தொலைவில் ஒரு எரிமலை வெடிக்கும்போது, ​​ஓட வேண்டும் என்றுதான் உள்ளுணர்வு சொல்லும். ஆனால் ஏப்ரல் 6 அன்று, இந்தோனேசியாவில் மலையேறும் குழுவினர் , சில நேரங்களில் அதற்கு நேர்மாறான செயலே மிகவும் பாதுகாப்பானது என்பதை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர்.  இந்தோனேசியாவின் டுகோனோ மலைக்கு அருகில் ஒரு குழுவினர் மலையேற்றம் செய்துகொண்டிருந்தபோது, ​​அது திடீரென வெடித்து சிதறியது. சில நொடிகளில், சாம்பல் மற்றும் சிதைவுகளின் ஒரு பிரம்மாண்டமான தீப்பிழம்பு வானத்தை நோக்கிச் சீறிப் பாய்ந்து, தரைப்பகுதியின் சூழ்நிலையை மாற்றியது. இதனால், மலை ஏறிக்கொண்டிருந்தவர் பயந்துபோய், எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்க கீழ்நோக்கி நகரத் தொடங்கினர். ஆனால், அவர்களின் உள்ளூர் வழிகாட்டி உடனடியாகத் ஓடிவந்து, அனைவரையும் அவர்கள் இருந்த இடத்திலேயே நிற்கும்படி அறிவுறுத்தினார். "கீழே போகாதீர்கள், மேலே வாருங்கள்! மேலே, மேலே, மேலே," என்று அந்த வழிகாட்டி கத்தியுள்ளார். முதலில், அந்த முடிவு இயல்புக்கு முரணானதாகத் தோன்றியது. ஆபத்திலிருந்து விலகிச் செல்வதுதான் வழக்கமானது. ஆனால் எரிமலைப் பகுதிகளில், குறிப்பாக ஒரு தீவிர வெடிப்பின் போது, ​​கீழே இறங்குவது உண்மையில் ஆபத்தை அதிகரிக்கக்கூடும். சாம்பல் மேகங்கள், வேகமாக நகரும் சிதைவுகள் மற்றும் எரிமலை வாயுக்களுடன் சேர்ந்து, பெரும்பாலும் கீழ்நோக்கிப் பயணிக்கின்றன. இதன் பொருள், மலையேறுபவர்கள் தங்களுக்குத் தெரியாமலேயே மிகவும் ஆபத்தான பகுதிக்குள் நேராக நடந்து சென்றிருக்கக்கூடும். வழிகாட்டியின் 'அங்கேயே இருங்கள்' என்ற அழைப்பு, அக்குழுவை ஆபத்திலிருந்து காப்பாற்றியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகிவருகிறது.      ]]>

Bills & Payments · SPONSORED

Pay Any Bill Instantly

Electricity, water, gas and more — one app, zero hassle.

Visit AllBills.in